
Introduction: இந்த பதிவில் அழகிய கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 19, 2024
கவிதை: வாழ்க்கை
அதிகாலை பயணம் சன்னல் ஓர இருக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை குளித்து நிற்கும் பால் வாடை மாறாத இளம்நாத்து இருந்தாலும் தென்றலுடன் காதல் தெற்கு இருந்து வடக்கே வீசும் காற்றும் இளம் நாத்தை விடுவதாக தெரிய வில்லை. காதல் யாரைத்தான் விட்டது
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வாழ்க்கை
குயில் கூவ மயில் ஆட நகர்ந்து செல்லும் நத்தையும் நாட்டியம் ஆட நண்டும் சண்டைக்கு வர வெண் நாரை சமாதானம் செய்ய இந்த காட்சியை பார்த்த போது கண் பார்வை மேலும் அழகு பெற்றது
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வாழ்க்கை
பிரபஞ்சம் அழகுக்கு அழகு சேர்க்கும் அதிசயம் ஆனது . பட்டென்று யாரோ என்மீது தொட்டவுடன் சட்டென்று விழித்திரை நீக்க காதோரம் பெரும் சத்தம் கண்ணோரம் பெரிய பெரிய கட்டிடம்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வாழ்க்கை
உள்ளத்தில் மிதந்து செல்லும் அழகிய நிகழ்வுகள்
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வாழ்க்கை
அய்யோ நான் கண்டது கனவா? அழகான வாழ்வை தொலைத்து மனிதன் தனக்கு தானே சிறை வைத்த கொடுமை இந்த நாலு சுவரு.
- சோழநாட்டுகவிஞர்
No comments: