செவ்வரளி காதல் கவிதை

செவ்வரளி – காதல் கவிதை

செவ்வரளி
பூ வாட்டம் நீ சிரிக்க
செங்காந்தள்
பூ வாட்டம் என் மனசு தவிக்குதடி

மாஞ்சோலை யாவும்
மனசோட நீ பேசயில
வெள்ளியங்கிரி மலை மீது
தேன் சாரல் வீசுதடி

பட்டுபுடவைக்குள்ள
பட்டாம்பூச்சி போல நிற்பவளே
உன் தேன் சாரல் தேகத்தில்
என் இமைச்சாரல் பூசவா.

நெருங்கி
வந்த மின்காந்தமே
ஏன் என் உள்ளத்தில்
அந்த மின்சாரம் போல் துள்ளி குதிக்கிறாய்?

ஆட்டி விடும்
காதல் மந்திரமே
நான் உன்னை நினைத்து சுத்துகிறேன்

நீ என் கைவிரல்
பிடித்து சுத்துகிறாய்

என்னை
காதலிக்க வந்தவள்
என்னை காதலித்து
என் கைவிரல் பிடித்து
பிறகு
என் முதல் குழந்தையானள்.

என்
அன்பு அழகியே
ஐ லவ் யூ.

- சோழநாட்டுகவிஞர்

No comments:

Powered by Blogger.