காதல்
ஒரு சுகம்
காதல்
ஒரு தாகம்
ஆம்
அவளோடு அமர்ந்து
அவள் கைவிரல் பிடித்து
அவள் காதோரம் கதை பேசும் பொழுது
காதல் ஒரு சுகம்.....
செவ்வானம்
சிவக்க செந்தூரம் மணக்க
அவள் கூந்தல் வாசம் பூவாய் மணக்க
கொட்டும் அவள் புன்னகை பூவை
என் கண்ணில் பருகும் பொழுது
காதல் ஒரு சுகம்.....
தித்திக்கும்
இனிப்பும் தேன் சொட்டும்
அவள் பேச்சும் என் இதயத்தில்
தென்றல் போல் நுலைந்து
என்னுள் தாலாட்டு பாடும் பொழுது
காதல் ஒரு சுகம்...
அவசரமாய்
சுத்தும் இந்த வாழ்க்கையில்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி
என்னை நம்பி என்னோடு வந்து அவள் அமர்ந்த பொழுது
ஆகா ஆகா
காதல் ஒரு சுகம்.
No comments: