அதிகாலை
நேரம் யாவும் அவள் நினைவாள் வாடுகிறேன்.
அங்குலம் அங்குலமாக
அவள் நினைவை தேடுகிறேன்
ஆசை மனைவி
ஆறுதல் மனைவி
என்னுள் ஏக்கத்தை
மட்டும் விதைக்க வில்லை என்னவள்
அவள்
பேரன்பும் பேரும் காதலையும் விதைத்தாள்
நித்தமும்
வருகிறாள் நினைவில் மலர்கிறாள்
புத்தாடை வேண்டும் என்று புன்னகை தருகிறாள்...
அவள்
கரம் பிடிக்க முயல்கிறேன்
என்னுள் கரைந்து
கனவில் மிதந்து போகிறாள் அமைதியாக
மண்ணுலகை விட்டு வின்னுலகத்திற்கு
பறந்து செல்லும் முன்
என் நெஞ்சில்
ஒரு துளி நிசப்தத்தை விட்டுச் செல்கிறாள்…
அந்த நிசப்தமே
என் வாழ்வின் இசை,
அந்த மௌனமே
என் காதலின் மொழி.
நிலவாய் வந்து
இரவுகளை ஒளியூட்டினாள்,
மலராய் வந்து
என் மனத்தை மணமூட்டினாள்.
அவள் இல்லை என்றாலும்
அவள் நினைவே போதும்
என் உயிர் துடிக்க,
என் கவிதை பிறக்க.
கனவுகளில் அவள் கை பிடித்தால்
நிஜம் முழுவதும் நான் நிறைவடைகிறேன்,
வானில் அவள் சிரித்தால்
பூமியில் என் இதயம் பூத்துப் பொங்குகிறது.
அவள்
பெயர் ஒரு மந்திரம்,
நினைவு ஒரு வரம்,
காதல் என் உயிரின் நிரந்தரம்.
No comments: