உள்ளுணர்வை உணர்த்தும் சிறந்த தமிழ் ஓவியங்கள்

வெற்றியில் 
இல்லாத ஒன்று ...
தோல்வியில் 
இருக்கிறது அது அவமானம்....!

அவமானம் 
எப்போதும் அழகானது...!
ஏன் தெரியுமா 
உன்னுள் இருக்கும் திறமையை
உன்னையே உணர வைக்கும்.

தேடி தேடி
அலைந்த கால்கள் 
தேடாமல் ஓர் இடத்தில் 
அமர்ந்தது...
வாழ்வின் ஏமாற்றத்தை உணர்ந்தது.

முடியுமா 
என்ற கேள்விக்கு பதில் 
தன்னால் முடியும் என்று உன் மூளையில் பதிவு செய்து வா.
உன் வாழ்வு வசந்தமாகும் .

வெற்றிடத்தில் 
தான் வெளிச்சம் வேகமாக பாய்கிறது 
நம் மூளையின் பாய்ச்சல் கற்பதுக்கு இப்படி தான் பாய வேண்டும்.

அழகாய் தெரியும் நிலவு கூட அம்மாவாசையில் மறைந்து நம்மை நிலவை தேட வைக்கிறது.

மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி பிறந்த குழந்தை தயாரை எட்டி உதைத்து பால் வேண்டி.

No comments:

Powered by Blogger.