அதிகாலை
நேரம் யாவும் அவள் நினைப்பு தான்
அந்தி சாய்ந்த பிறகும் அவள் நினைப்பது தான்
தினமும்
என்னோடு எழுந்து என்னோடு உறவாடியவள்
இன்று
என்னோடு இல்லை..
காரணம் ஏதும் இன்றி
தன் உயிரை நீத்தாளே
இந்த உலகில்
அவள் இன்றி நான் எப்படி வாழ்வேன் என்று சற்றும் யோசிக்காமல் உயிரை நீத்து விட்டாள்
தவிப்பு
என்பது கொடுரத்தின் உச்சம்
அவளோடு வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி உயிர் நீத்து வருகிறேன்
No comments: