அழகாய் ஒரு நாடு இப்போ அள்ளல் படுதே

அழகாய் ஒரு நாடு இருந்ததே 
நாட்டுக்குள் பல வீடு இருந்ததே 
வீட்டுக்கு முகப்பில் தின்னை இருந்ததே 
தின்னையில் பேச பல கூட்டம் இருந்ததே

எல்லாம் இப்போ எங்கு போனதோ 
ஏமாற்றம் குணம் ஏன் வந்ததோ 
அய்யோ அய்யோ நாடு இப்போ 
ஏன் இப்படி மாறி போனதோ 

கல்வி கற்ற மனிதர்கள் இங்கே 
ஏமாற்ற துணிந்து விட்டான் 
பொய்யை மட்டும் பேசி இப்போ
காசு பார்க்க துணிந்து விட்டான் 

முன்பு ஒரு கூட்டம் இருந்ததே 
உண்மை மட்டும் பேசி வாழ்ந்ததே 
எங்கும் பாசம் பொங்கி வழிந்ததே
கூட்டமாய் பேசி மகிழ மழலையர் கூட்டம் இருந்ததே 

எங்கே அப்பா அந்த கூட்டம் 
ஏன் அப்பா இந்த மாற்றம் 
வீட்டோடு பிரசவம் பார்த்த 
பள்ளு போன கிழவிகள் எங்கே

அழகாய் ஒரு நாடு இருந்ததே 
நாட்டுக்குள் பல வீடு இருந்ததே 
வீட்டுக்கு முகப்பில் தின்னை இருந்ததே 
தின்னையில் பேச பல கூட்டம் இருந்ததே

புள்ளை பெக்க ஊசி போடும் 
விஞ்ஞான வளர்ச்சியாம் அப்பா
வீரம் செறிந்த ஆம்பளை யாரும் 
இப்போ நாட்டில் இல்லையப்பா 

ஏனப்பா இந்த மாற்றம் 
ஏறு பிடித்த ஆண்மகன் எங்கே
வீறுகொண்டு சண்டை போட்ட 
வீரமான ஆண்மகன் எங்கே 

அழகாய் ஒரு நாடு இருந்ததே 
நாட்டுக்குள் பல வீடு இருந்ததே 
வீட்டுக்கு முகப்பில் தின்னை இருந்ததே 
தின்னையில் பேச பல கூட்டம் இருந்ததே

வேகத்தடை ஏதும் இல்லா 
மண் ரோடு எங்கே போச்சு 
மாட்டு வண்டி மாடும் இப்போ
நடமாடும் பொம்மை ஆட்சு 

ஏனப்பா இந்த மாற்றம் 
எங்கே நாம் போகபோறோம் 
வாங்கப்பா இயற்கை நோக்கி
நாம் அழகாக வாழப்போறோம்.



No comments:

Powered by Blogger.