கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் கவிதை

உன் பெயர் என் வாழ்க்கை.

நீ என்னோடு வரும் வரை என் வாழ்க்கை
வெறும் ஒத்தையடி பாதையாக இருந்தது..

நீ என்னோடு வந்து சேர்ந்த பிறகு
என் பாதை பூந்தோட்டமாய் பூத்து குலுங்க ஆரம்பித்து..

நீ வெறும்
காதல் துணை மட்டும் இல்லை
என் வாழ்வில் நீ ஒரு அச்சானி

நான் சோர்ந்தால்
இளைப்பாற இடம் தந்ததவளே..
நான் நித்தம் சிரிக்க
காரணமான உயிர் நீ

உன் கைவிரல்
பிடித்த நாளில் இருந்து
எந்தன் வெற்றியின் துவங்கத்தை
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன்

நாம்
சண்டை போட்டு முடித்தாலும்
அடுத்த நொடி நான் தேடுவது
உன்னைத்தான்.

சண்டை என்ற வார்த்தை சிறியது
ஆனா நம்ம கணவன் மனைவி உறவு பெரியது

நீ என் மனைவி மட்டும் இல்லை
என் வாழ்வின் அர்த்தம்

நாளை என்ன நடக்கும் என்று தெரியாது
ஆனா ஒரு விடயம் உறுதி
நீ என் அருகில் இருந்தால்
அந்த நாள் கூட அழகுதான்.

என் உயிரே
இந்த உலகில் நாம் இருவரும் சேர்ந்து இருந்தால் அதுதான் சொர்க்கம்

No comments:

Powered by Blogger.