🌹 கவிதை
தீபமாய் தீ மூட்டி
எரியும் எந்தன் காதலுக்கு
தோகை விரித்து
அடைக்கலம் தந்த அன்பு சுடரே!
உன்
கைவிரல் பிடித்து
காதோரம் பேச ஏங்கும்
எந்தன் இதயத்தில்
இன்பமாய் வந்த இளம்சுடரே!
வா
என்னோடு பேசு
வா
என்னோடு பழகு
ஒரு வாழ்க்கை தான்
நமக்குள் ஏன் பகை
உந்தன் முகம்
நான் கண்ட உலகம்
அதை காண்பது
மட்டுமே நான் வாங்கி வந்த வரம்
ஏன்
இப்போது
உன் முகத்தை காட்ட மறுக்கிறாய் ?
உன் முகம்
காணது என் வாழ்க்கை ஏது...
நான் இளைப்பாற நீ
உன்னோடு அழகாய் வாழ்ந்து
மெளனமாக உன்னில் கரைய தவிக்கிறோன் வா.
💖 இந்த கவிதை பற்றி
இந்த கவிதை காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.ஒருவரை நேசிக்கும் மனம், அவரின் முகமே உலகமாகி விடும் உணர்ச்சி —அதை இங்கே தீச்சுடர் போல சித்தரிக்கப்படுகிறது.
No comments: