கவிதை:01
நறுமணம்
வீசும்
நங்கை நீயோ ?
மெல்லிய
தென்றலின்
பிம்பம் நீயோ?
கொடி
முல்லை யின்
வனப்பு நீயோ?
பார்வையில்
பாவை நீ வீசிய
அம்பு இரத்தம் இன்றி
யுத்தம் செய்கிறதே
இதன் பெயர் தானோ
"காதல் ".
கவிதை -02
மஞ்சள்
பூசாத முகம்
நெற்றியில்
குங்குமம் இட்டு
குதித்து ஓடும் ரதி
அவள்
மல்லிப்பூவை
சூடி கொண்டதால்
ஏனோ..
என் மனசு
என்னை விட்டு
அவளிடம் தஞ்சம்
அடைய துடிக்கிறது
மெல்ல பார்க்கிறாள்
சினுங்கி சிரிக்கிறாள்
ஏனோ
இந்த மல்லிப்பூ
காதலனை உள்ளத்தில்
ஏற்க மறுக்கிறாள்.
கவிதை -03
வெண்
தாமரை
மலர் விழியே
உந்தன்
கண் மை
காதலனை
அறிவாயா நீ
உந்தன்
கண்கள்
பேசும் என்பதை
உன் கண்கள்
தீண்டிய பிறகே
நான் அறிவேன்...
நீ தீட்டிய
கண் மை
இன்னும்
என்னுள் உன்னுடன்
பேச...
காதல் தீயை
பற்ற வைக்கிறதே.
No comments: