தங்க நிலவு கவிதை

கவிதை தலைப்பு: தங்க நிலவு 🌙

அறிமுகம் (Introduction)

கவிதை என்பது மனதை பேச வைக்கும் மொழி.
இன்று நான் எழுதிய தங்க நிலவு கவிதையை உங்களுடன் பகிர்கிறேன்.

கவிதை (Kavithai)

ஆகாய தங்க நிலாவாய் வந்தவளே
எந்தன் உயிரை நிலலாய் பதித்தவளே
ஏனோ நீ என் மீது வெளிச்சம் வீசுகிறாய்
அதனால் தான் என்னவோ நான் பூமி பந்தில் மிளீர்கிறேன்.

காற்றுக்கு ஏதடி சுவர்
அது பூமியில் பரவி இருப்பது தானே நிஜம்
உள்ளத்தில் தேடி சுவர்
அது உன்னில் பரவி வாழ்வது தானே
நிஜம்...

ஜோடி பறவை
கூடி வாழ்வதை பார்
காற்று புக கூட இடைவெளி இல்லையே
அரும்பு மீசை காரி
நாம் மட்டும் ஏன் இடைவெளி தரவேண்டும்?

நெருங்கி வா
என்னிடம் நெருப்பு இல்லை
உன்னை கண் கலங்காமல் காக்க
என்னிடம் பொறுப்பு மட்டும்
உள்ளதடி

எழுதியவர் (Author)

– சோழநாட்டுக் கவிஞர்

நிறைவு (Conclusion)

இந்த தங்க நிலவு கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்தை கீழே பகிர்ந்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


No comments:

Powered by Blogger.