ஆசையாய்
என்னருகில் வந்தவளே
அள்ளி மலரே !
ஆசை நிலவே !
நீரோடையில்
நீந்தி செல்லும் மீன் போல
என் உள்ளத்தில்
இன்பத்தை அனுபவிக்க
நினைவை தந்தவளே !
பூக்களில்
என்னடி வண்ணமயம்
உன் புன்னகையை விடவா
இந்த பூக்கள் அதிசயம்?
கண்டேன்
உன் கருவிழியை
காதலித்தேன் உன் புன்னகையை
மெல்ல சிரிக்கும்
என் வண்ண மயிலே
நீயே என் வாழ்வின் காவியம்
ஓசை
இல்லாமல் என்னோடு
வாழ வந்தவளே
நம் நித்தம் வாழ்வை
வர்ணிக்கவா? சத்தமே இன்றி சமர்ப்பிக்க வா?
அழகிய
மண் கூடைக்குள்
மல்லிப்பூ சூடி வந்தவளே
உன் பாதம்
பட்டவுடன் அழகாய் பூத்ததடி
இந்த மண் குடிசை...
மஞ்சள்
பூசிய முகம்
மரிக்கொழுந்து போல உன் மனம்
பிஞ்சு விரலால்
பூவை என் நெஞ்சில் சாய்த்தவள் நீ
ஆசை தீர
ஏக்கம் எனக்கு
சட்டென்று எழுந்து வெட்கத்தில்
விழுந்தடி என் வெட்கம் உன்னிடத்தில்
மீசை
இல்லாத ஓவியம் நீ
என் ஆசை தீர காதல் நீ
மனைவியின்
அன்பு அந்த ஆழ்கடல்
முத்து போன்றதடி
உன்னோடு
உறவாடி வாழத்தானே
இப்பிறவி எனக்கு
அன்பு மலரே
ஆசை சுடரே
நீ இன்றி நான் ஏது?
No comments: