ஒரு வாலிபன் ஏக்கம்

ஊர் 

சுற்றும் வாலிபன் 

உயிரணு பேசும் காதலன்


காலை 

முதல் மாலை வரை

எனக்காய் காத்து நிற்கும் 

என்னவன் 


கருஞ்சீரகம் 

போல கருப்பு

கந்தக கவர்ச்சி போல

அவன் ஈர்ப்பு 

பாலில் கரைந்த சீனி போல

என்னுள் கரைந்தவன் 


அவனை பற்றி என் வாழ்வில் ஒரு கவிதையாவது நான் எழுத வேண்டும் 


இதோ 

எழுதிவிட்டேன் 


வாருங்கள் காணலாம் 


பச்சரிசி சிரிப்பில் 

குழந்தையை போல் இருப்பான் 

பாச உணர்வில் 

தாயை போல் அணைப்பான்


அவன் ஏக்கம் 

ஆழ்கடல் போல் 

என் உள்ளத்தில் அலை அடிக்கிறது 


ஏனோ

இந்த அலையின் ஓசை

அவன் செவி சென்று சேரவில்லை 


இங்கே 

நான் அவன் நினைப்பில் 

எங்கோ

அவன் என் நினைப்பில் 


இப்படியே 

போகிறது எங்கள் வாழ்க்கை 

இலையில் ஒட்டாத பாதரசம் போல.


No comments:

Powered by Blogger.