தூரல்
இல்லாத நிலம் போல
என் நெஞ்சம் கிடக்குது
நீ
உந்தன் பார்வையில்
தூண்டி போட்டு இழுக்கையில
நெஞ்சம் மெல்ல சிரிக்குது
ஆசையெல்லாம்
கடல் அலையை போல
நெஞ்சில் கொதிக்குது
அதில்
துள்ளி குதிக்கும் மீனை போல
உந்தன் வாசம் வீசுது
சந்தன மரம் போல
சலசலனு போறவளே
எந்தன் உள்ளம் மணக்குடி
உன்னை கரம் பிடிக்க துடிக்குதடி
ஏனோ
ஆசையாவும்
கற்பனையில் மிதக்குது
அது
காற்றோடு
உன்னை வந்து சேரமுனு என் மனசு நம்புது
எந்தன்
காதல் உணர்வை சுவாசிக்க
நீ விரும்புவாயா என்ற ஏக்கம் எனக்கு!
நீ
மட்டும்
சுவாசிக்க துவங்கி விட்டால்
வேற இன்பம் ஏதடி எனக்கு.
உறவுகள்
யாரிடமும் உள்ளம் இருக்கிறது
எந்தன்
உள்ளம் யாவும் நீயே இருக்கிறாய்
சட்டென்று வாடி
பட்டென்று பறப்போம்
காதல் உலகத்தில்.
No comments: